நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. த. க. வித்தியாலய ஒளிவிழா நாளை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. த. க. வித்தியாலய ஒளிவிழா- 2023 நாளை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 22) காலை 10.30 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

வித்தியாலய அதிபர் யூ. கிறிஸ்சாந்தி தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் பிரதம விருந்தினராக நெடுந்தீவு மகா வித்தியாலய ஆசிரியர். அருட்பணி சோபன் ரூபஸ் அடிகளார் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

காலை 7.30 மணிக்கு ஒளிவிழா சிறப்பு திருப்பலி புனித சவேரியார் ஆலயத்தில் நெடுந்தீவு பங்குத்தந்தையினால் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article