நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு ஏழு புதிய அதிபர்கள் நியமனம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட 07 பாடசாலைகளுக்கு புதிதாக அதிபர்கள் நியமிக்கப்பட்ட போதும் இரு பாடசாலைகளுக்கான அதிபர்களே கடந்த 18 ஆம் திகதி முதல் கடமையினைப் பொறுப்பேற்றுள்ளனர்.

அந்தவகையில் நெடுந்தீவு மகா வித்தியாலயம் – ஐயாத்துரை தயாபரன், நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அ. த. க. வித்தியாலயம்- சிவப்பிரகாசம் சிவகுமார் ஆகியோரே கடமையினை பொறுப்பேற்றுள்ளனர்.

இதேவேளை ஏனைய பாடசாலைகளான நெடுந்தீவு சுப்பிரமணிய வித்தியாலயம், நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. த. க. வித்தியாலயம், நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம், நெடுந்தீவு ஶ்ரீஸ்கந்தா வித்தியாலம், நெடுந்தீவு மங்கையற்கரசி வித்தியாலயம் என்பவற்றிற்கு நியமிக்கப்பட்டவர்களே நேற்று (டிசம்பர் 20) வரை கடமையினை பொறுப்பேற்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share this Article