நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபை முன்பள்ளிகளின் ஒளிவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபையின் மத்தி மற்றும் மேற்கு முன்பள்ளிகளின் ஒளிவிழா நிகழ்வானது நேற்று (டிசம்பர் 19) இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக பங்கு தந்தை அருட்பணி பத்திநாதன் அடிகளார், கௌரவ விருந்தினராக நெடுந்தீவு திருக்குடும்ப கன்னியர் மடத்தின் முதல்வர் அருட்சகோதரி லுமினா போல்ராஜ் அவர்களும், கௌரவ விருந்தினராக நெடுந்தீவு மகாவித்தியாலத்தினுடைய அதிபர் ஐ. தயாபரன் அவர்களும் அருட்சகோதரி செல்வி மற்றும் முன்பள்ளிகளின் இணைப்பாளர் திருமதி வசந்த் சகாயராணி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேற்படி நிகழ்வில் மாணவர்களுடைய கலை நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் தரம் ஒன்றிற்கு செல்கின்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும் இதன்போது இடம்பெற்றது.

Share this Article