வடக்கின் நான்கு தீவுகளுக்கும் தொடர்ச்சியான மின் விநியோகம்!- பெரும் மகிழ்சியில் சுற்றுலாவிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கையின் வடபகுதியில் உள்ள 04 தீவுகளிலும் நேற்று ஏற்பட்ட மின்தடையால் பாவனையாளர்கள் பாதிக்கப்படவில்லை.

இலங்கைத்தீவு முழுவதும் சில மணி நேர மின்சாரம் தடைப்பட்டிருந்தாலும் அதனைச் சூழவுள்ள நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு, அனலைதீவு ஆகிய தீவுகளுக்கான மின்சாரம் மின் இயந்திரமூடாகவே வழங்கப்பட்டு வருவதனால் மின் கட்டமைப்பு மாற்றத்தால் எந்தவித பாதிப்பும் இன்றி தொடர்ச்சியாக மின்சார விநியோகம் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் காரணமாக நெடுந்தீவு பகுதியில் தங்கியிருந்த உல்லாசப் பயணிகள் பெரும் மகிழ்ச்சியுடன் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Article