நெடுந்தீவுக்கு உலங்குவானூர்தி மூலம் சுற்றுலாப் பயணம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

உலங்குவானூர்தி மூலம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இன்று (டிசம்பர் 4) காலை நெடுந்தீவுக்கு வந்துசென்றுள்ளனர்.

அவுஸ்ரேலிய நாட்டைச் சேர்ந்த இருவர் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா வளிகாட்டி ஒருவர் என மூன்று பேர் அனுராதபுரம் பகுதியில் இருந்து தனியார் உலங்குவானூர்தி மூலம் நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் மைதானத்தில் இன்று காலை 10.00 மணியளவில் வந்திறங்கியுள்ளனர்.

அவர்களை மலா்மாலை அணிவித்து வரவேற்றதுடன் நெடுந்தீவு காளாமுனை கடற்கரைப் பகுதியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் காலை உணவு வழங்கப்பட்டபின் நெடுந்தீவிலுள்ள சகல சுற்றுலா இடங்களைப் பார்வையிட்டு மாலை 2.00 மணியளவில் மீளச் சென்றுள்ளனர்.

நெடுந்தீவில் உள்ள சுற்றுலாத்துறை சேவையாளரின் ஏற்பாட்டிலேயே இவ்வருகை இடம்பெற்றுள்ளதுடன் இதேபோன்று தொடர்ச்சியாக சுற்றுலாவிகள் வருகைதரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவின் சுற்றுலாத் துறையின் ஒரு சிறந்த முன்னேற்ற படிக்கல்லாக இவ் வருகை அமைகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share this Article