நெடுந்தீவு தூய லவுறேஞ்சியார் ஆலய புனரமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு தூய லவுறேஞ்சியார் ஆலய புனரமைப்பு வேலைத்திட்டமானது பங்குத்தந்தை அருட்பணி பத்திநாதன் அடிகளாரின் அனுமதி மற்றும் ஆலோசனைகளின் பிரகாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தில் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டத்தில் ஆலய கூரையினை சீர்செய்வது ஆரம்ப பணியாக திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தை சார்ந்த பலரது ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்புடன் இவ்வாலயத்தை புனரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றதுடன் இவ் ஆலயமானது நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் வரலாற்றில் நீடிய ஆயுளை கொண்ட புராதான ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article