உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – புலனாய்வு அதிகாரிகளுக்கு விளக்கமறியல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
Hands of the prisoner in jail

உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரு புலனாய்வு அதிகாரிகளையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பான வழக்கு இன்று  (07/10) விசாரணைகை்கு எடுத்துக் கொள்ளப்பட்டப் போது , கோட்டை நீதிவான் பசன் அமரசேன இவ்வாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதன்போது, வவுணதீவு இராணுவ முகாமைச் சேர்ந்த, இவ்வழக்கின் முதலாவது சந்தேகநபரான யாசிம் பாவா ஜெகில்பாஸ் மற்றும் 2 ஆவது சந்தேகநபரான சரத் சமந்த ஆகிய இரு புலனாய்வு அதிகாரிகளே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் இன்று சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நிகழ்நிலை காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

இவ்வழக்கின் 3 ஆவது சந்தேகநபராகப் புனராய்வுத் துறையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது வழக்கு தொடர்பான மேலதிக அறிக்கையை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் சில முக்கியமான தகவல்கள் கிடைக்கப்பெற்றமை மற்றும் அவற்றை மேல் அதிகாரிகளுக்கு அறிவிக்கும் நடைமுறை தொடர்பில் சந்தேகநபர்கள் வழங்கியுள்ள வாக்குமூலங்கள் மற்றும் சாட்சியங்கள் குறித்து தொடர்ந்தும் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது. இந்நிலையில் மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்ட நீதிமன்றம், சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது

Share this Article
Leave a comment