நெடுந்தீவு கல்விக்கோட்ட முன்பள்ளி மாணவர்களின் கலைவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கல்விக்கோட்டத்தின் முன்பள்ளி மாணவர்களின் கலைவிழா 2023 இன்று(டிசம்பர் 1) நெடுந்தீவு பிரதேச சபையின் தேவா கலாசார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

முன்பள்ளிகளின் இணைப்பாளர் திருமதி வசந்த சகாயராணி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவுக்கான முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி டானியல் நிஷாந்தினி கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் சிறப்புற இடம்பெற்றதுடன் பரிசில்வழங்கும் வைபவமும் இடம்பெற்றது.

Share this Article