நெடுந்தீவு மகாவித்தியாலய வளாகத்தில் இறந்தவர்களுக்கான இரங்கல் திருப்பலி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மாகாவித்தியாலய வட்டத்தின் இறந்த அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆன்ம இளைப்பாறுதலுக்கான இரங்கல் திருப்பலி நேற்று (நவம்பர் 3) பாடசாலை வளாகத்தில் உள்ள ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

பாடசாலை சமூகத்தினரின் ஏற்பாட்டிலும் ஒழுங்குபடுத்தலிலும் இடம்பெற்ற இத்திருப்பலியை பாடசாலையின் ஆசிரியர் அருட்பணி சோபன் றூபஸ் அடிகளார் ஒப்புக்கொடுத்து இணைந்து மன்றாடினார்.

பாடசாலையின் இத்தகைய வளர்ச்சியில் கடந்த காலங்களில் பணிபுரிந்த அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்களின் வகிபாகமே பிரதானமாக அமைவதாகவும், அவர்களின் ஆன்ம இளைப்பாறுதலுக்காக பிரார்திக்கவும் அவர்களை நினைவுகூரவேண்டிய பொறுப்பும் உண்டு எனவும் திருப்பலியின் போது அருட்பணி சோபன் றூபஸ் அடிகளார் குறிப்பிட்டிருந்தார்.

Share this Article