நெடுந்தீவில் உயிரிழந்த இளைஞனின் இறுதிக்கிரியையில் பங்குத்தந்தை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவில் கடந்த 30 திகதி உயிரிழந்த குணராசா தனுசனின் இறுதி நிகழ்வின் போது நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் அடிகளார், அன்னாரின் ஆன்ம இளைபாறுதலுக்காகவும் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு தனது அனுதாபங்களை பகிர்ந்துகொள்ளவும் கலந்துகொண்டிருந்தார்.

அமரர் தனுசன் இந்துமத சகோதரனாக இருந்தபோதும் புனித லோறன்சியார் ஆலய திருவிழா காலப்பகுதிகளில் ஆர்வத்தோடு தொண்டாற்றிவருபவர் எனும் அடிப்படையில் நெடுந்தீவு மேற்கு புனித லோறன்சியார் ஆலய நிர்வாகத்தினருடன் பங்குத்தந்தை சென்றிருந்தார்.

உயிரிழந்த இளைஞரின் இறுதி நிகழ்வுகள் நேற்று(நவம்பர் 2) காலை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article