நெடுந்தீவு மேற்கு வீதி ஓரங்களில் பற்றைகள்!- பொதுமக்கள் சிரமம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு மேற்கு பகுதிக்கு செல்லுகின்ற வீதி ஓரங்களில் இருக்கின்ற பற்றைகள் வெட்டிசுத்தம் செய்யப்படாமல் இருப்பதனால் பெரும் சிரமங்களை அப்பகுதியின் ஊடாக பயணிக்கும் மக்கள் எதிர்கொள்வதாக கவலை தெரிவித்துள்ளனர்.

இவ் வீதியானது நீண்டகாலமாக திருத்தம் செய்யப்படாமல் பயணிக்க முடியாத நிலையில் இருப்பதனால் இனிவரும் மழை காலங்களில் வெள்ள நீர் சேர்ந்து நிற்பதால் வீதியின் ஓரமாக உள்ள பகுதிகளின் ஊடாகவே மக்கள் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாகவும் அவ்வாறு செல்வதற்கு ஏற்ற வகையிலேயே அருகில் உள்ள பற்றைகள் இதுவரைக்கும் வெட்டி சுத்தம் செய்யப்படாமல் இருக்கின்றது.

இதனால் எதிர்வரும் நாட்களில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். எனவே குறிப்பிட்ட இப்பகுதியில் இருமருங்கையும் ஏதாவது அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைத்துடன் அல்லது பொது மக்களாக இணைந்து வெட்டி சுத்தம் செய்வதற்கு ஒழுங்கு செய்தால் மழை காலத்தில் இப்பாதை ஊடாக ஓரளவு இலகுவான பயணத்தை மேற்கொள்ளமுடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article