நெடுந்தீவு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க கூட்டம் இன்று(செப்ரெம்பர் 5) அதிபர் ஏ. சச்சிதானந்தம் தலைமையில் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

கடந்த சில வருடங்களாக இருந்து வந்த நிர்வாகத்தினர் தொடர்ச்சியாக செயல்படாத காரணத்தினாலும் அழைப்பு விடுக்கப்பட்டும் இன்றைய கூட்டத்திலும் அவர்கள் கலந்து கொள்ளாத காரணத்தினாலும் புதிய நிர்வாக சபையை தெரிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதன் காரணத்தினால் கூட்டத்தில் கலந்துகொண்ட குறிப்பிட்ட அளவான பழைய மாணவர்களுடன் புதிய நிர்வாகம் ஒன்று தெரிவு செய்யப்பட்டதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டதுடன் , இப்படிவத்துடன் அங்கத்துவ பணமாக ரூ. 200.00 செலுத்தி சகல பழைய மாணவர்களையும் இணத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தெரிவுசெய்யப்பட்ட நிர்வாகம் தொடர்ந்து செயற்படுதல் தொடர்பாக எதிர்வரும் மாத்த்தில் நடாத்தவுள்ள பொதுக்கூட்டத்தில் தீர்மானிக்கபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article