நெடுந்தீவில் உள்ளக விளையாட்டுகளுக்கான ஆரம்ப நிகழ்வு இன்று ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு பிரதேச சபையின் கீழ் இயங்கும் வகையில் உள்ளக விளையாட்டுக்களுக்கான ஆரம்ப நிகழ்வு இன்று(ஓகஸ்ட்  29) காலை 10. 00 மணியளவில் நெடுந்தீவு தேவா கலாச்சார மண்டபத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நெடுந்தீவு பிரதேச சபை செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆர். ஸ்ரீவர்மன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன் உள்ளக விளையாட்டுக்களையும் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேசத்தில் உள்ள சனசமூக நிலைய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், பிரதேச சபையினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Share this Article