நெடுந்தீவில் உள்ளக விளையாட்டுக்களுக்கான ஆரம்ப நிகழ்வு நாளை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு பிரதேச சபையின் கீழ் இயங்கும் வகையில் உள்ளக விளையாட்டுக்களுக்கான ஆரம்ப நிகழ்வு நாளை( ஓகஸ்ட் 29) காலை 10. 00 மணியளவில் பிரதேச சபைக்கு சொந்தமான தேவா கலாச்சார மண்டபத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

நெடுந்தீவு பிரதேச சபை செயலாளர் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வில், யாழ் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆர். ஸ்ரீவர்மன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன், உள்ளக விளையாட்டுக்களையும் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேசத்தில் உள்ள சனசமூக நிலைய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களை கலந்து சிறப்பிக்குமாறு பிரதேச சபையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Share this Article