மென்பந்து கிரிக்கெட் போட்டியில் சென் அன்ரனிஸ் இளைஞர் விளையாட்டுக் கழக ஆண்கள் அணி சம்பியன்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவின் ஆண், பெண் இருபாலருக்குமான மென்பந்து கிரிக்கெட் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை(ஓகஸ்ட் 27) நெடுந்தீவு ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

ஆண்களுக்கான போட்டியில் சென் அன்ரனிஸ் இளைஞர் விளையாட்டுக் கழகம் இறுதிப் போட்டியில் சென் ஜேம்ஸ் இளைஞர் விளையாட்டுக் கழகத்தை வெற்றிகொண்டு சம்பியனாக தெரிவானது.

பெண்களுக்கான போட்டியில் விங்ஸ் இளைஞர் விளையாட்டுக் கழகம் இறுதிப் போட்டியில் ஐக்கியதீபம் இளைஞர் விளையாட்டுக் கழகத்தை வெற்றிகொண்டு சம்பியனாக தெரிவானது.

Share this Article