நாளை முதல் மீண்டும் பயணிகள் சேவையில் குமுதினி படகு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

குமுதினிப் படகு நாளை (ஓகஸ்ட் 24) முதல் மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபடவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 7 மணிக்கு நெடுந்தீவில் இருந்து குமுதினிப் படகு குறிகாட்டுவான் நோக்கிப் புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமுதினிப் படகு பழுதடைந்த நிலையில் திருத்த வேலைகளின் பின்னர் குறிகாட்டுவானில் தரித்துவிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் இன்று மாலை குமுதினிப் படகு குறிகாட்டுவானில் இருந்து பயணிகளை ஏற்றியவாறு நெடுந்தீவு சென்று, தரித்துள்ளது.

Share this Article