நெடுந்தீவு பொது அமைப்புக்களுடன் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பு கலந்துரையாடல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பு நெடுந்தீவில் உள்ள பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளது.

இந்தக் கலந்துரையாடல் மு.அமிர்தமந்திரன் தலைமையில், நிர்வாக உறுப்பினர் கலின்குமாரின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது.

நெடுந்தீவில் உள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். நெடுந்தீவின் அபிவிருத்தி தொடர்பாக அவர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

இந்தக் கலந்துரையாடலில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஆலோசனைக் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் பாடசாலை அதிபர்கள், மாதர் சங்க நிர்வாகிகள், ஆலய நிர்வாகங்கள், விளையாட்டுக் கழகங்கள், சனசமூக நிலையங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article