நெடுந்தீவு பிரதேச இளைஞர் விளையாட்டு விழா இன்று ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு பிரதேச இளைஞர் விளையாட்டு விழா இன்று(ஓகஸ்ட் 19) காலை 9.00 நெடுந்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இன்றும் நாளையும் எல்லே, கபடி, உதைபந்தாட்டம், வலைப்பந்தாட்டம் ஆகிய போட்டிகள் இடம்பெறவுள்ளது.

21.08. 2023 திங்கட்கிழமை காலை
மணிக்கு ஆண் , பெண் இருபாலாருக்குமான ஒற்றையர், இரட்டையர் கரம் போட்டிகள் தனித்தனியே இடம்பெறவுள்ளது.

26.08. 2023 சனி
காலை 9.00 மணிக்கு ஆண் , பெண் இருபாலாருக்குமான கரப்பந்தாட்டப் போட்டி தனித்தனியே இடம்பெறவுள்ளதுடன்

27.08. 2023 ஞாயிறு
காலை 9.00 மணிக்கு ஆண் , பெண் இருபாலாருக்குமான மென்பந்து கிரிக்கற் போட்டி தனித்தனியே இடம்பெறவுள்ளதுடன் ஆண் , பெண் இருபாலாருக்குமான கயிறுஇழுத்தல் போட்டியும் தனித்தனியே இடம்பெறவுள்ளது.

இதேவேளை மேற்படி போட்டிகள் நடைபெறும் இடம் தொடர்பில் கழகங்களுக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article