நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் மறைக்கல்வி மாணவர்களுக்கான கருத்தரங்கு ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் மறைக்கல்வி மாணவர்களுக்கான கருத்தரங்கு எதிர்வரும் வாரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளை (ஓகஸ்ட் 19) சனிக்கிழமை தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரையான மாணவர்களுக்கும்

எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கள் கிழமை தரம் ஆறு மற்றும் ஏழு ஆகிய வகுப்புக்களின் மாணவர்களுக்கும்

எதிர்வரும் 23 ஆம் திகதி புதன் கிழமை தரம் எட்டு மற்றும் ஒன்பது ஆகிய வகுப்புக்களின் மாணவர்களுக்கும்

எதிர்வரும் 25 ஆம் திகதி வெள்ளி கிழமை தரம் பத்து மற்றும் பதினொன்று ஆகிய வகுப்புக்களின் மாணவர்களுக்கும் இக்கருத்தரங்குகள் இடம்பெறவுள்ளன.

நெடுந்தீவு கத்தோலிக்க மறையாசிரியர் அமையத்தின் ஏற்பாட்டில் மேற்குறித்த திகதிகளில் காலை 09:30 மணிக்கு ஆரம்பமாகும் கருத்தரங்கானது 11:30 மணிவரை நெடுந்தீவு தூய யுவானியார் ஆலயத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article