நெடுந்தீவில் சிரமதானம் செய்யப்பட்ட பொது விளையாட்டு மைதானம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பொது விளையாட்டு மைதானம் பொதுமக்கள் மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்களின் பங்களிப்புடன் நேற்று (ஓகஸ்ட் 17) சிரமதானம் செய்யப்பட்டது.

நெடுந்தீவு பிரதேச இளைஞர் விளையாட்டு விழா 2023 இன் முதல் போட்டியான எல்லே நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெரும்நிதிப் பங்களிப்புடன் புதிதாக அமைக்கப்பட்ட பொது விளையாட்டு மைதானம் நீண்ட காலமாக கைவிடப்பட்ட நிலையில் இருந்ததுடன் விளையாட்டு நிகழ்வுகளோ அன்றி விளையாட்டுப் பயிற்சி நிகழ்வுகளோ இடம்பெறவில்லை.

தற்போது நெடுந்தீவு பிரதேச இளைஞர் விளையாட்டு விழா போட்டிகளுக்காக தயார்ப்படுத்தப்படுகின்றமை வரவேற்கத்தக்க விடயம் என்பதுடன் இந்த முன்மாதிரியான முயற்சியை தொடர்ந்து இம் மைதானத்தை அனைவரும் பயன்படுத்துவதன் மூலம் மேலும் தேவையான மைதான அபிவிருத்தியினை மேற்கொள்ள முடியும் என விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article