நெடுந்தீவு புனித லோரஞ்சியார் ஆலய திருவிழா திருப்பலி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு புனித லோரஞ்சியார் ஆலய திருவிழாவானது இன்று(ஓகஸ்ட் 10) பங்குத்தந்தை அருட்பணி ஜோண் கனீசியஸ் அடிகளாரின் நெறிப்படுத்தலுக்கு அமைவாக சிறப்பாக இடம்பெற்றது.

புனிதரின் விழா கூட்டுத் திருப்பலியை தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி பேர்ணாட் றெக்னோ அடிகளார் தலைமையேற்று ஒப்புக்கொடுத்தார்

மேலும் அருட்தந்தையர்களான அருட்பணி யூஜின் அமல்ராஜ் அமதி அடிகளார், அருட்.சோபன் றூபஸ் அடிகளார் மற்றும் வலைப்பாடு பங்குத்தந்தை லியான்ஸ் அடிகளாரும் இணைந்து இவ்விழா திருப்பலியை சிறப்பித்திருந்தனர்.

காலை 05:45 மணிக்கு திருச்செபமாலையும் 06:15 மணிக்கு திருப்பலியும் தொடர்ந்து திருச்சுரூப பவனியும் புனிதரின் திருச்சுரூப ஆசீரும் இடம்பெற்றது.

Share this Article