நெடுந்தீவின் ஊரும் உறவும் அமைப்புக்கு அரசாங்க அங்கீகாரம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவின் “ஊரும் உறவும்” அமைப்பானது கடந்த சில ஆண்டுகளாக சமூகப் பணிகளை ஆற்றி வருகின்றனர். அவர்களின் சமூகப் பணியைத் தொடர்ந்து செயற்படுத்தும் முகமாகத் தமக்கு அரச அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பதை அவர்கள் அறிவித்துள்ளனர்.

தொடர்ந்து கடந்த கால சமூகப் பணிகளுக்கு ஆதரவு தந்துதவிய அரச, அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும் உறவுகள் அனைவருக்கும் தமது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

எதிர்காலத்திலும் நெடுந்தீவின் அபிவிருத்திப் பணிகளில் அனைவரது ஒத்துழைப்பையும் அவர்கள் வேண்டி நிற்கின்றனர்.

Share this Article