நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்கள் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் அத்து மீறிய மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய இழுவை படகுகளுடன் 09 மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் நேற்று(ஜூலை 24) இரவு வேளை இலங்கை கடற்பரப்பில் இருந்து இந்திய இழுவை படகுகளை விரட்டியடிக்க ஒரு சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்த நடவடிக்கையில், இலங்கை கடற்பரப்பில் தொடர்ந்தும் தங்கியிருந்த 09 இந்திய மீனவர்களுடன் 02 இந்திய வேட்டையாடும் இழுவை படகுகளை கடற்படையினர் கைப்பற்றினர்.

இந்திய மீனவர்களுடன் கைப்பற்றப்பட்ட இழுவை படகுகள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், அவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Share this Article