நெடுந்தீவில் கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி தனது வேலைத்திட்டங்களில் ஒன்றாகிய கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் அபிவிருத்தி தொடர்பாக நேற்று(ஜூலை 22) நெடுந்தீவில் கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் மற்றும் கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களை ஒன்றினைத்து முன்னுரிமை அடிப்படையில் அபிவிருத்தி செய்ய வேண்டிய திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.

இதில் சமாச தலைவர் ப.லீலியான் குரூஸ் முன்னாள் சமாச தலைவர் அ. அருள்ஜீவன் முன்னாள் சமாச செயலாளர் பி அருள்ஞானராஜ் என்போரால் கடந்த கால அபிவிருத்தி தேவைகள் தொடர்பிலும் தற்போதைய தேவை தொடர்பாகவும் உரையாடப்பட்டது.

நெடுந்தீவு கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் தேவை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

எதிர்வரும் 22.09.2023 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இதன் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் அலையோசை கடற்றொழில் கூட்டுறவு சங்கத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெறும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Share this Article