திருத்த வேலைகளின் பின்னர் பரீட்சார்த்த பயணத்தில் ஈடுபடவுள்ள குமுதினிப் படகு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையே பயணிகள் சேவையில் ஈடுபட்ட குமுதினிப் படகு திருத்த வேலைகளின் பின்னர் நாளை பரீட்சார்த்த பயணத்தில் ஈடுபடவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையே பயணிகள் சேவையில் ஈடுபட்ட குமுதிப் படகு பழுதடைந்ததை அடுத்து திருத்த வேலைகளுக்காக வல்வெட்டித்துறைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தது.

திருத்த வேலைகள் நிறைவடைந்ததை அடுத்து நாளை பரீட்சார்த்த பயணத்தை குமுதினிப் படகு மேற்கொள்ளும் என்றும், அதன் செயற்பாடுகளை அவதானித்து நாளை மறுதினம் வல்வெட்டித்துறையில் இருந்து நெடுந்தீவுக்கு குமுதினிப் படகு கொண்டு செல்லப்படும் என்றும், பயணிகள் சேவை இடம்பெறும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரியவருகின்றது.

Share this Article