நெடுந்தீவு வீதிகளில் மின்னிணைப்புக்கு இடைஞ்சலாகவுள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவின் பிரதான மற்றும் உள்ளக வீதிகளில் மின்னிணைப்புக்களுக்கு இடைஞ்சலாகவுள்ள மரங்களை வெட்டி மின்சார வழங்கலை சீர்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த வேலைத்திட்டமானது நேற்று மற்றும் இன்றைய தினமும் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் இடம்பெறும் பகுதிகளில் மின்துண்டிப்பு இடம்பெற்று உடனடியாகவே அவை மீண்டும் வழங்கப்படுவதாகவும் அரச நிறுவனங்கள் வைத்தியசாலை மற்றும் பாடசாலைகளின் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு இத்துண்டிப்பு இடம்பெறுவதாகவும் நமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

Share this Article