நெடுந்தீவு கொலைச் சந்தேகநபருக்கு மேலும் விளக்கமறியல் நீடிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவில் 6 பேர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் ஜூலை 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊற்காவற்றுறை நீதவான் நேற்று(ஜூலை 4) உத்தரவிட்டுள்ளார்.

நெடுந்தீவில் ஆறு பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஊர்காவற்றுறை நிதிமன்றில் நேற்று சந்தேக நபர் முற்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து சந்தேக நபரை எதிர்வரும் மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

சந்தேக நபர் நெடுந்தீவுக்கு வந்து ஆரம்ப நாட்களில் தங்கிநின்ற தங்ககத்தின் உரிமையார் ஆ. கந்தையா என்பவர் நீதிமன்றில் பிரசன்னமாகி வாக்குமூலம் வழங்கியதுடன் மேலும் இருவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டபோதும் அவர்கள் நீதிமன்றில் பிரசன்னமாகவில்லை.

Share this Article