நெடுந்தீவு புனித தோமையார் ஆலய திருவிழா எதிர்வரும் 3 ஆம் திகதி ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு புனித தோமையார் ஆலய வருடாந்த திருவிழாவானது எதிர்வரும் மாதம் 03 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையினால் வெளியிட்டுள்ள வழிபாட்டு ஒழுங்குதனிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதன் பிரகாரம் எதிர்வரும் 02 ஆம் திகதி நற்கருணை பெருவிழாவும் 03 ஆம் திகதி புனிதரின் திருவிழாவும் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நவநாள் வழிபாடுகளில் மறையுரையை அமல மாரித்தியாகிகள் துறவறசபையின் றொஜிஸ்ரன் அடிகளார் வழங்கவுள்ளதுடன் வழிபாடுகளையும் நெறிப்படுத்தவுள்ளார்.

நவநாள் வழிபாடுகள் தினமும் 05:00 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருப்பலியும் இடம்பெறவுள்ளது.

திருவிழா திருப்பலி காலை 06:00 மணிக்கு இடம்பெறவுமையும் குறிப்பிடத்தக்கது.

Share this Article