எழுவைதீவு நூலகத்தை பார்வையிட்ட முருகவேள் வித்தியாலய மாணவர்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

உலகம் வாசிப்பவருக்கே சொந்தமானது எனும் தொனிப்பொருளுக்கமைய எழுவைதீவு முருகவேள் வித்தியாலய மாணவர்கள் சுகந்தன் ஆசிரியரின் வழிப்படுத்தலுடன் இன்று(ஜூன் 23) எழுவைதீவு நூலகத்தை பார்வையிட்டு பயன்படுத்தினர்.

இதன்போது மாணவர்களின் ஆர்வத்தினை தூண்டும் வகையிலான ஆலோசனைகளும் வழங்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு மகிழ்வூட்டலும் வழங்கப்பட்டது.

உலகம் வாசிப்பவருக்கே சொந்தமானது எனும் கருப்பொருளில் 2023 ஆண்டுக்கான தேசிய ஆவணமாக்கல் சபை வாசிப்பை ஊக்கப்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் ஊர்காவற்துறை பிரதேசசபையானது ஊர்காவற்துறை, அனலைதீவு,புளியங்கூடல்,எழுவைதீவு உப அலுவலகங்களில் செயலாளரின் ஆலோசனைக்கமைய சிறப்பாக முன்னெடுக்கின்றது.

இதேவேளை அனைத்து எழுவைதீவு மக்களும் நூலகத்தினை முழுமையாக பயன்படுத்துமாறு ஊர்காவற்துறை பிரதேசசபையின் உப அலுவலகம் அழைப்பு விடுக்கின்றனர்

Share this Article