நெடுந்தீவுக் கொலைச் சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவில் 6 பேர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் ஜூலை 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊற்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டார்.

நெடுந்தீவில் ஆறு பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஊர்காவற்றுறை நிதிமன்றில் இன்று(ஜூன் 20) சந்தேக நபர் முற்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து சந்தேக நபரை எதிர்வரும் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.

சம்பவம் இடம்பெற்ற வீட்டில் பணியாற்றிய பெண், கிராம அலுவலர் மற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் என 03 பேர் இன்றையதினம் நீதிமன்றில் பிரசன்னமாகி வாக்குமூலம் வழங்கினர்.

இதேவேளை அடுத்த தவணையில் மேலும் 03 பேரை விசாரணை செய்யவேண்டும் எனவும் மன்றில் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Article