நெடுந்தீவில் 53 பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவில் தெரிவு செய்யப்பட்ட ஐம்பத்தி மூன்று குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் இன்று (ஜூன் 10) வழங்கி வைக்கப்பட்டன.

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவர் விசுவாசம் செல்வராசா அவர்களின் நெறிப்படுத்தலில் பூமணி அம்மா அறக்கட்டளையால் நெடுந்தீவுப் பகுதியிலுள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கக்கூடிய குடும்பங்களுக்கே உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

பூமணி அம்மா அறக்கட்டளையின் வாழ்வாதார உதவியாக, குடும்பம் ஒன்றிற்கு தலா 2000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம், அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம், அறக்கட்டளையின் இலங்கை கிளையின் நிர்வாகசபை உறுப்பினர் சா.தவசங்கரி ஆகியோர் பயனாளிகளுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.

Share this Article