க.பொ.த பரீட்சையை நிறைவு செய்த நெடுந்தீவு மாணவர்களுக்கு ஆங்கில கற்கைநெறி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

க.பொ.த சாதாரணதர பரீட்சையை நிறைவு செய்த மாணவர்களுக்கான ஆங்கில கற்கைநெறி நெடுந்தீவு பங்குப்பணிமனையில் இடம்பெறவுள்ளது.

இரண்டு மாதகால கற்கை நெறியில் இயேசு சபையின் அருட்சகோதரர் ஷயிந்த அவர்கள் வளவாளராக பணியாற்றவுள்ளார்.

நெடுந்தீவு கல்விக்கோட்டத்தின் அனைத்து மாணவர்களும் இக்கற்கைநெறியில் இணைந்துகொள்ள முடியும் என்றும் வகுப்புக்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி நெடுந்தீவு மத்தியில் உள்ள பங்குப்பணிமனையில் ஆரம்பமாகும் என நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி வசந்தன் அடிகளார் குறிப்பிட்டார்.

மேலும் அரச சேவையிலுள்ளோர் மற்றும் வயது வந்தவர்களுக்கான சிங்கள மொழி கற்கைநெறியும் மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கற்கையில் இணைய விரும்புபவர்கள் தமது பெயர்களை 15 ஆம் திகதிக்கு முன்பதாக பங்குப்பணிமனையில் பதிவுசெய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Share this Article