நெடுந்தீவுப் பிரதேச செயலகத்தில் பயனாளிகளுக்கு இலவச அரிசி வழங்கல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பெரும் போகத்தில் அறுவடை செய்யும் நெல்லை கொள்வனவு செய்து வறிய குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கும் ஜனாதிபதியின் செயற்றிட்டத்திற்கு அமைவாக இராணுவத்தால் அறுவடை செய்யப்பட்ட அரிசி வழங்கல் நிகழ்வு இன்று (ஜூன் 7)இடம்பெற்றது.

நெடுந்தீவுப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 100 குடும்பங்களுக்கு 10 கிலோ கிராம் வீதம் வழங்கப்பட்டது.

நெடுந்தீவுப் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஈ. பி. டி. பியின் நெடுந்தீவுக்கான இணைப்பாளர் மற்றும் கிராம அலுவலர்கள், பயனாளிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Share this Article