பாவனைக்கு உகந்தவகையில் வீதியை புனரமைத்துத் தருமாறு நெடுந்தீவு மக்கள் கோரிக்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கிழக்குப் பகுதிக்கான பிரதான வீதியில் இரண்டு கிலோ மீற்றர் வீதியானது நீண்ட காலமாக திருத்தம் செய்யப்படாமல் பயணத்துக்கு உதவாத வகையில் சேதமடைந்து காணப்படுகின்றது.

முருக்கன் ஆலடி தொடக்கம் தீர்த்தக்கரை வரையான இடைப்பட்ட வீதியே சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. இதன் காரணமாக இப்பாதை ஊடாக பயணிக்கும் பெரும்பாலான பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் மழைக்காலங்களில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ளுகின்றனர்.

இந்த வீதியானது வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ளதாகும். எனவே இதனைத் திருத்தம் செய்து மக்களின் சீரான போக்குவரத்துக்கு ஆவன செய்ய வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Share this Article