முதியோருக்கான சிறப்புத் திருப்பலியும், ஒன்றுகூடல் நிகழ்வும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு, தூய யுவானியார் ஆலயத்தில் நேற்று (மே 4) முதியோருக்கான சிறப்புத் திருப்பலியும், ஒன்றுகூடல் நிகழ்வும் நடைபெற்றது.

திருப்பலியை அமல மரித்தியாகிகள் துறவற சபையின் அருட்பணியாளர் கரோவ் அடிகளார் ஒப்புக்கொடுத்தார். ஒன்றுகூடல் நிகழ்வை அருட்தந்தையுடன் இணைந்து கன்னியர் மட தலைவி அருட்சகோதரி லுமினா போல்ராஜ் நெறிப்படுத்தினார்.

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வுக்கான அனுசரணையை அமரத்துவமடைந்த திருச்செல்வம் பிலோமினாவின் குடும்பத்தினர் அன்னாரின் நான்காம் ஆண்டை நினைவுகூரும் விதமாக வழங்கியிருந்தனர்.

Share this Article