இரு நாட்களுக்கு முன்பே வெட்டப்பட்ட நாய்! – நெடுந்தீவுக் கொலை ஏற்கனவே திட்டமிடப்பட்டதா?

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவில் ஐவரை வெட்டிக் கொலை செய்து ஒருவரை காயமடைய செய்த சம்பவம் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டமையை நாய் மீதான தாக்குதல் வெளிப்படுத்தி நிற்கிறது.

பிரதான குடியிருப்பாளரின் வளர்ப்பு நாய் கொலைச் சம்பவம் செய்யும் போது குரைத்து சத்தமிட்டு இடையூறு செய்யலாம் என்றவகையில் சம்பவ தினத்திற்கு 2 நாட்களுக்கு முன்பே வெட்டப்பட்டதாக தகவல்கள் தெரியவருகிறது.

இரு நாட்களின் முன்பே நாய் காயத்துடன் தப்பித்து அருகிலுள்ள உணவக வளாகத்தில் காயத்துடன் நடமாடியதை அவதானித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Share this Article