தேசிய ரீதியில் கவிதைப் போட்டியில் முதலாம் இடம் பெற்ற மாணவி கௌரவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட கலை இலக்கியப்போட்டிகளில் நெடுந்தீவுப் பிரதேச செயலகப் பிரிவில் கவிதை எழுதுதல் போட்டியில் தேசிய ரீதியில் 1 ஆம் இடம்பெற்ற பத்மலிங்கம் லக்சிகா என்ற மாணவிகௌரவிக்கப்பட்டார்.

குறித்த மாணவிக்கான தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் 10000 ரூபா பெறுமதியான காசோலை என்பன வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு நெடுந்தீவுப் பிரதேச செயலாளர் மதிப்புக்குரிய F.C.சத்தியசோதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் யாழ் மாவட்ட செயலக பிரதம கணக்காளர், பிரதம உள்ளக கணக்காய்வாளர், நெடுந்தீவு பிரதேச செயலக கணக்காளர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share this Article