நெடுந்தீவுக் கொலை தொடர்பில் பொலிஸாருக்கு டக்ளஸ் தேவானந்தா விடுத்த கோரிக்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவுக் கொலை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸாருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தப் படுகொலை சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாணத்திற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்டு உரையாற்றயபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் தொடர்பாகவும், இன்று நெடுந்தீவை விட்டு வெளியேறியவர்கள் தொடர்பாகவும் அவதானம் செலுத்துமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இப்படுகொலையின் உண்மைகள் கண்டறியப்பட்டு, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான அச்சத்தினை விரைவில் போக்க வேண்டுமென்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share this Article