கேரள கஞ்சாவுடன் இந்தியப் படகை கைப்பற்றிய கடற்படையினர்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மேற்கு இலங்கைக் கடற்பரப்பில் 62 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற இந்திய மீன்பிடி படகு ஒன்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதுடன் மூன்று சந்தேக நபர்களையும் நேற்று(ஏப்ரல் 15) மாலை கைதுசெய்துள்ளனர்.

போதைப்பொருள் ஊடுருவலைத் தடுக்கும் நோக்கில், இலங்கைக் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மூவரும், கேரள கஞ்சா மற்றும் இந்திய படகுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Share this Article