கல்வித் தந்தை எட்வேட் நவரெட்ணசிங்கம் அறக்கட்டளை பணிமனைக்கு அடிக்கல் நடும் நிகழ்வு

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு மகா வித்தியாலய முதல் அதிபர் கல்வித்தந்தை எட்வேட் நவரெட்ணசிங்கம் அறக்கட்டளை பணிமனைக்கான அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 5) நடைபெற்றது.

இந்த நிகழ்வு நெடுந்தீவு மத்தி 10ஆம் வட்டாரத்தில் (நெடுந்தீவு தேசிய பாடசாலை முன்பாக) பிற்பகல் 04:30 மணியளவில் இடம்பெற்றது.

பிரம்மஶ்ரீ கா.புவனேந்திரசர்மா, பங்குத்தந்தை எஸ்.வசந்தன் அடிகளார் ஆகியோரின் இறை சிறப்பு வழிபாட்டுடன் நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வில் அதிபர் நவரட்ணசிங்கத்தின் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த அறக்கட்டளை நீண்ட காலமாக நற்பணிகள் ஆற்றிவரும்நிலையில் அறக்கட்டளைக்கான காணி கொள்வனவு செய்யப்பட்டு அதனூடாக எதிர்கால சந்ததியினருக்கு கல்விப்பணி ஆற்றப்படவுள்ளது.

Share this Article