தவக்காலத்தை முன்னிட்டு இயேசு இளையோர் ஒன்றியத்தின் போட்டிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் குழந்தை இயேசு இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தவக்காலத்தை முன்னிட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இந்தப் போட்டிகள் அனைத்தும் எதிர்வரும் சித்திரை மாதம் இரண்டாம் திகதியன்று தூய பற்றிமா அன்னை ஆலயத்தில் நடத்தப்படவுள்ளன.

மாணவர்கள் கல்வி பயிலும் தரங்களுக்கேற்ப பிரிவுகளாக்கப்பட்டு வியாகுல பிரசங்கம் மற்றும் பிழை தீர்க்கும் மந்திரம் ஆகியவற்றை நேர்த்தியான முறையில் பாடும் போட்டி நடத்தப்படவுள்ளது.

போட்டிக்குரிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விடயங்களை மறைப்பாடசாலைகளூடாக போட்டியாளர்கள் அறிந்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

Share this Article