நெடுந்தீவில் நடமாடும் மருத்துவ சேவை முன்னெடுப்பு!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேசத்தில் நடமாடும் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை என்பன நடாத்தப்படவுள்ளதாக பிரதேச சுகாதார பரிசோதகர் ஜெனற் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் இந்த நடமாடும் மருத்துவ சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

வைத்தியர்கள், சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் குடும்பநல உத்தியோகத்தர்கள் அடங்கிய சுகாதார குழுவே இந்த நடமாடும் சேவையில் ஈடுபடவுள்ளது.

அனைத்துக் குடும்பங்களையும் அவரவர் வதிவிடங்களில் சந்தித்து மேற்படி சேவையை வழங்கவுள்ளதாகவும் பிரதேச சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share this Article