21 வயது இளைஞன் பொன்னாலையில் சடலமாக மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் நேற்று (ஜனவரி 9) இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மூளாய், வேரம் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான கி.கிருசாந்த என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் இவருக்கு 21ஆவது பிறந்த தினம் என்று தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்து சென்ற இவர் வீடு திரும்பாததை அடுத்து உறவிகர்கள் நேற்று அவரைத் தேடியுள்ளனர்.

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்துக்குச் செல்லும் பிரதான வீதியில் பொன்னாலை பிள்ளையார் ஆரயத்துக்கு முன்பாக உள்ள கிணற்றில் இருந்து இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article