13ஆவது திருத்தம் விரைவில் நடைமுறையாகும் – ரணில் யாழ்ப்பாணத்தில் உறுதி

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

13ஆவது திருத்தச் சட்டம் விரைவாக நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய பொங்கல் விழாவுக்காக இன்று (ஜனவரி 15) யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில், அங்கு கருத்துத தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

13ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள அவர், கட்டம் கட்டமாக அதை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, காணிப் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Share this Article