வீட்டில் நிறுத்தி வைக்கப்ட்ட மோட்டார் சைக்கிள் திருட்டு!- பொலிஸில் முறைப்பாடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்.இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு- வடலியடைப்பு பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்றிரவு(நவம்பர் 18) களவாடப்பட்டுள்ளது.

பல்சர் 150 ரக மோட்டார் சைக்கிளே இவ்வாறு திருட்டு போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் மோட்டார் சைக்கிளை வீட்டில் நிறுத்தி வைத்துவிட்டு சாவியினை கழற்றாமல் விட்டு சென்றுள்ள நிலையிலே மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article