விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

விபத்தில் சிக்கி மயக்கமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், ஆஸ்பத்திரி வீதியைச் சேர்ந்த சபரிமுத்து சகாயரூபன் என்ற 59 வயது நபரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 20ஆம் திகதி யாழ்ப்பாணம், வேம்படிச் சந்தியில் இராணுவ பேருந்தும், சைக்கிளும் மோதி இந்த விபத்து நடந்துள்ளது.

சைக்கிளில் பயணித்தவர் மயக்கமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்படடார். அவர் சிகிச்சை பயனின்றி இன்று (ஜனவரி 27) உயிரிழந்தார்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

Share this Article