விசேட சேவையின் ஊடாக 31 பேருக்குப் பிறப்புப் பதிவு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை பிறப்பு பதிவு செய்யாத 31 பேருக்கு பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்யும் நிகழ்வு யாழ். மாவட்ட பதில் மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (ஜனவரி 11) நடைபெற்றது.

இந்தப் பிறப்புப் பதிவுகள் பதிவாளர் நாயகம் திணைக்களத்தால் முன்னெடுக்கப்ட்டன. கடந்த மாதம் 23ஆம் திகதி மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமைக்கு அமைய இந்த விசேட சேவை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பிரதி பதிவாளர் நாயகம் கே.நடராஜா அவர்களின் விரைவான நடவடிக்கையின் கீழ் பிறப்பு பதிவு செய்யாத சிறுவர்கள் மற்றும் ஏனையவர்கள் உட்பட 31 பேருக்கு பிறப்பு பதிவு மேற்கொள்ளப்பட்டது.

Share this Article