வயாவிளான் மானம்பிராய் ஆலயத்தில் பொங்கல் பொங்கி வழிபாடு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள வயாவிளான் மானம்பிராய் ஆலயத்தில் மக்கள் இன்று (பெப்ரவரி 5) பொங்கல் பொங்கி வழிபாட்டில் ஈடுபட்டனர்.

கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் மாதம் ஒரு தடவை ஆலய வழிபாடுகளில் ஈடுபட்ட மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் வழிபாடுகளில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

தற்போது வயாவிளான் மக்கள், பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

Share this Article