வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு கடும் பாதுகாப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் நேற்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இரும்பு பாதுகாப்பு வேலிகள் வீதியில் வைக்கப்பட்டும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் ஏனைய பொலிஸ் நிலையத்தில் இருந்து மேலதிகமாக வரவழைக்கப்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில், மல்லாகம் நீதவான் நீதிமன்றின் உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்றுமுன்தினம் (19) உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், ‘ இளைஞனை பொலிஸார் கைது செய்து சித்திரவதைக்கு உட்படுத்தியதால் தான் இளைஞன் உயிரிழந்தார்’ என உறவினர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் , பொலிஸார் தன்னை எவ்வாறு சித்திரவதை செய்தனர் என கூறும் உயிரிழந்த இளைஞனின் காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

இளைஞனின் உறவினர்கள் , நண்பர்கள் ஊரவர்கள் மற்றும் பொதுமக்களை திரட்டி பாரிய போராட்டம் ஒன்றினை பொலிஸ் நிலைய பகுதியில் முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Share this Article