வடக்கு கடற்பரப்பில் மஞ்சள் பொதிகள் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடக்கு கடற்பரப்பில் 989 கிலோகிராம் எடை கொண்ட உலர்ந்த மஞ்சள் பொதிகளும் இரண்டு டிங்கி படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்றுமுன்தினம் இரவு (ஜனவரி 19) குருநகர் மற்றும் மண்டைதீவு ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் 33 முதல் 51 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கடற்படையினர் தெரிவித்தனர்.

இவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Share this Article